GLITZPINNACLE

Subtitle

News

KAVITHAI BY L Thavak Kumar (Thavakkumar L)

Posted by s.pree.preethi on September 19, 2012 at 2:25 AM

மேகம்

விண்ணோடு நான் மிதந்தாலும்

என்னோடு நீ நடந்தாலும்

கண்ணோடு நாம் கலந்தாலும்

நிலா பெண்ணே

 

உன்னை தீண்டும் யோகம் எனக்கில்லையே?

நான் கொண்ட காதலில் பிழையில்லையே...

உன் நெஞ்சில் எனக்கேனோ இடமில்லையே?

மேகத்தின் கண்ணீரில் உப்பில்லையே...

கடல் சேரும் மழை மீது தப்பில்லையே?

வீசும் வாடையில் என்னை

கடந்து சென்றாய்...

 

குளிர் ஓடையில் மெல்ல

நிழல் பதித்தாய்...,

 

மதியிழந்த மதியே..!!

கண்ணோடு நீ மறைந்தாலும் - என்

கண்ணீரில் அல்லவா முகம் புதைத்தாய்..?

என் காதல் மனதை - ஓடை நீரில் வீழ்ந்த

அந்த ஒரு துளி சொல்லுமடி - என்

உணர்வுனை கொல்லுமடி

 

விடியல் வந்ததென இன்பம் கொள்ளாதே

இன்னும் பல நூறு இரவுகள் வரும்...!

என் காதல் உன்னை தேடும் பின் கூடும்..!!!

 

அன்புடன்

 

தவக்குமார் லக்ஷ்மணன்

 

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments